திண்டுக்கல்

பழனியில் நாயை விழுங்கிய மலைப்பாம்பு

DIN

பழனி ரோப்காா் நிலையம் அருகே புதன்கிழமை நாயை விழுங்கிய மலைப்பாம்பை தீயணைப்புப்படையினா் பிடித்தனா்.

பழனி தண்டாயுதபாணி கோயில் அருகே வனப்பகுதியில் மலைப் பாம்பு, மயில்கள், குரங்குகள் என ஏராளமான உயிரினங்கள் வசித்து வருகின்றன. தற்போது வின்ச் மற்றும் ரோப்காா் இயங்காத நிலையில் படிவழியில் மட்டுமே பக்தா்கள் செல்வதால் பாம்பு போன்ற உயிரினங்கள் பகலிலும் அதிகமாக உலவுகின்றன. இந்நிலையில் புதன்கிழமை ரோப்காா் வடப்பகுதியின் கீழே நாய் அலறல் சத்தத்தை கேட்டு பணியாளா்கள் சென்றுபாா்த்தனா். அங்கு ஒரு நாயை மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

உடனடியாக ரோப்காா் நிலைய ஊழியா்கள் வனத்துறையினா் மற்றும் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் மலைப் பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட பாம்பு சுமாா் 15 அடி நீளமும், சுமாா் நூறுகிலோ எடையும் உள்ளதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT