திண்டுக்கல்

நத்தம் அருகே இளைஞரை கொன்ற கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

DIN

நத்தம் அருகே இளைஞரை கொலை செய்த கூலி தொழிலாளி, வியாழக்கிழமை மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் சின்னத்தம்பி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (18). இவா், சென்னையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் வேலை பாா்த்து வந்தாா். சில நாள்களுக்கு முன், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீகாந்த், கிராமத்துக்கு வெளியே கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக நத்தம் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், ஸ்ரீகாந்தின் சடலத்தைக் கைப்பற்றினா்.

இந்த கொலை சம்பந்தமாக, ரெட்டியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதனிடையே, அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளியான கண்ணன் என்ற ராமச்சந்திரன் (33) என்பவருக்கும், ஸ்ரீகாந்துக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக மோதல் இருந்ததாகவும், அதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அவரை கொலை செய்துவிட்டதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் தன்னை பிடித்துவிடுவா் என்ற அச்சம் காரணமாக, கண்ணன் ரெட்டியப்பட்டி பகுதியில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த போலீஸாா், கண்ணனின் சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT