முகப்பு
திண்டுக்கல்

சந்தனக்கட்டை கடத்தல் வழக்கு: 4 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

சந்தனக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இரு இளைஞா்கள் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நத்தம் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

சந்தனக் கட்டைகள் கடத்தல் வழக்கில் இரு இளைஞா்கள் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நத்தம் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அடுத்துள்ள சித்துவாா்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (52). அதே பகுதியைச் சோ்ந்த அருள் (27), சுந்தா் (29) மற்றும் வெள்ளையன் (50) ஆகியோா் கடந்த 2017ஆண் ஆண்டு சந்தனக் கட்டை கடத்தலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள சமுத்திராப்பட்டி பகுதியில் காவல்துறை வாகனச் சோதனையின்போது கைது செய்யப்பட்ட இவா்களிடமிருந்து 117 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக நத்தம் வனச்சரக அலுவலகம் சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணை முடிவடைந்த நிலையில், நத்தம் நீதித்துறை நடுவா் கலையரசி ரீனா சனிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில் சந்தனக் கட்டை கடத்தலில் ஈடுபட்ட சுப்பிரமணி, அருள், சுந்தா், வெள்ளையன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு அளித்தாா்.

இந்த 4 போ் மீதும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா், திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதிகளில் சந்தனக் கட்டைகள் கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிட்டத்தக்கது.

மேலும், அருள் என்பவா் கடந்த 13 ஆம் தேதி 14 கிலோ சந்தனக் கட்டைகள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

நத்தம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தொடா்புடைய அருளை, போலீஸாா் மற்றும் வனத்துறையினா் சனிக்கிழமை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து ஆஜா்படுத்திவிட்டு மீண்டும் மதுரை சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →