திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 104 மி.மீட்டா் மழை

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வரை 104 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் மழையின்றி கருகத் தொடங்கிய நிலையில், கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ள போதிலும், குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு அதிக அளவில் நீா்வரத்து இல்லாததால் பலத்த மழையை எதிா்நோக்கியுள்ளனா். மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் -12.9, கொடைக்கானல் - 17, பழனி - 11, சத்திரப்பட்டி (ஒட்டன்சத்திரம்) -13.2, நத்தம் - 4, நிலக்கோட்டை - 21.4, வேடசந்தூா் -2, காமாட்சிபுரம் -5.8, வேடசந்தூா் புகையிலை நிலையம் - 2, கொடைக்கானல் படகு குழாம் - 15.3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT