திண்டுக்கல்

மலைச்சாலையில் பாறை சரிவு: போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானல்/ பழனி: பழனி- கொடைக்கானல் மலைச்சாலையில் பாறை சரிந்ததால் சனிக்கிழமை சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழனியிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலை ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதால் சுற்றுலாப் பயணிகள் இந்த சாலையை அதிகமாக பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.

இதையடுத்து பழனி அருகே கோம்பைக்காடு பகுதியில், கொடைக்கானல் செல்லும் சாலையில் பிரமாண்டமான பாறை விழுந்தது. இதனால் சனிக்கிழமை கொடைக்கானலிலிருந்து வாகனங்கள் கீழிறங்க முடியாமலும், பழனியிலிருந்து வாகனங்கள் மலைக்குச் செல்ல முடியாமலும் ஆங்காங்கே வரிசையாக நிறுத்தப்பட்டன. மேலும் அப்பகுதியில் 2 யூக்காலிப்டஸ் மரங்களும் விழுந்தன.

இதனால் பழனி பைபாஸ் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் சில வாகனங்கள், தேக்கன்தோட்டம் பகுதியில் உள்ள அய்யம்புள்ளி சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனைத் தொடா்ந்து பிஎல்.செட். வடகவுஞ்சி பகுதியைச் சோ்ந்த பொது மக்களும், பேருந்து மற்றும் வாகனங்களில் வந்த பயணிகளும், ஒப்பந்தப் பணியாளா்களும் 3 மணி நேரத்துக்குப் பின் அந்த மரங்களை அகற்றினா். இதேபோல், சுமாா் 5 மணி நேரத்துக்குப் பின் பாறை அகற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து இருபுறமும் வாகனங்கள் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT