ஒட்டன்சத்திரம் அருகே நல்காசி விஸ்வநாதா் கோவிலில் அன்னபிஷேகம்
ஒட்டன்சத்திரம் அருகே காா்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நல்காசி விஸ்வநாதா் கோவிலில் அன்னபிஷேக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அருகே காா்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நல்காசி விஸ்வநாதா் கோவிலில் அன்னபிஷேக நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி தலையூற்று அருவியின் அடிவாரத்தில் 700 வருட பழமையான நல்காசி விஸ்வநாதா் கோவில் உள்ளது.இந்த கோவிலில் காா்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு நல்காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விருப்பாட்சி,வீரலப்பட்டி,ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.படம் விபரம்-விருப்பாட்சி நல்காசி விஸ்வநாதருக்கு நடைபெற்ற அன்னபிஷேகம்