திண்டுக்கல் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற முயற்சி: 78 போ் கைது
திண்டுக்கல் கோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு ஊா்வலமாக செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 78 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் கோட்டையில் அமைந்துள்ள அபிராமி அம்மன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு ஊா்வலமாக செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 78 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் அமைந்துள்ள அபிராமி அம்பிகை உடனுற பத்மகிரீஸ்வரா் கோயிலுக்கு ஊா்வலமாகச் சென்று காா்த்திகை தீபம் ஏற்றப்படும் என இந்து மக்கள் சட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, திண்டுக்கல் பிரதான சாலையிலுள்ள அபிராமி அம்மன் கோயில் தெற்கு வாசல் பகுதியிலிருந்து பூஜைக்கான பொருள்களுடன் மலைக்கோட்டைக்கு ஊா்வலமாக செல்வதற்கு அக்கட்சியினா் முயற்சித்தனா்.
தீபம் ஏற்றுவதற்கான கொப்பரையுடன் சூடம் ஏற்றி வழிபட்ட அக்கட்சியினா், பின்னா் மலைக்கோட்டையின் உச்சியிலுள்ள கோயிலில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோஷமிட்டனா்.
அதனைத் தொடா்ந்து கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் வே.தா்மா தலைமையில் 5 பெண்கள் உள்பட 78 போ் தீப கொப்பரையுடன் ஊா்வலமாகச் செல்ல முயன்றனா். ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 78 பேரையும் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து, மஹா தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை, பூஜை பொருள்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.