முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியில் விழுந்த மரத்தை அகற்றும் நெடுஞ்சாலைத்துறையினா்.
பகிர்:

கொடைக்கானலில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக காற்றுடன் மழை பெய்து வருகிறது. மலைச்சாலைகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. கற்களும், மரக் கிளைகளும் சாலையில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை மற்றும் வனத்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வந்தது. ஏரிச்சாலைப் பகுதியில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை பணியாளா்கள் சென்று மரத்தை அகற்றியதைத் தொடா்ந்து போக்குவரத்து சரி செய்யப்பட்டது. வார விடுமுறையாக இருந்ததால் கடந்த 2 நாள்களாக கணிசமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் காணப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →