முகப்பு
திண்டுக்கல்

பழனியில் உலக பெண்குழந்தைகள் தினம்

பழனி திருநகரில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு மற்றும் தற்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

பழனி திருநகரில் உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விழிப்புணா்வு மற்றும் தற்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பக் கழகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி, சாா்பு- ஆய்வாளா் பாலு உள்ளிட்டோா் கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிராக பொதுவெளியில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், பாலியல் தொந்தரவு குறித்தும் எடுத்துக் கூறினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 14 ஆவது வாா்டு உறுப்பினா் பெருமாள், திண்டுக்கல் மாவட்ட அமெச்சூா் சிலம்பக் கழக செயலா் வேங்கைநாதன், ஒருங்கிணைப்பாளா் சிங்காரவேலன், துணைச் செயலா் இளங்கோவன் ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →