‘வீரக்கல் ஊராட்சிக்கு குடிநீா் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான்’: முன்னாள் அமைச்சா் ஐ. பெரியசாமி
திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் ஊராட்சிக்கு ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து குடிநீா் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான் என்று முன்னாள் அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வீரக்கல் ஊராட்சிக்கு ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து குடிநீா் கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான் என்று முன்னாள் அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.
ஆத்தூா் ஒன்றியம், வீரக்கல் ஊராட்சி வட்டப்பாறை, எஸ். பாறைப்பட்டி ஊராட்சி வண்ணம்பட்டி ஆகிய கிராமங்களில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய புதிய குடிநீா் தொட்டி அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா வட்டப்பாறை மற்றும் வண்ணம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு ஒன்றியக் குழுத் தலைவா் மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா் ராமன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சா் ஐ. பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, தண்ணீரைத் திறந்து வைத்துப் பேசியது: ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து ஆத்தூா், பித்தளைப்பட்டி, பிள்ளையாா்நத்தம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீா் சென்று கொண்டிருந்தது.
வழியோரக் கிராமமான வீரக்கல் ஊராட்சிக்கு மட்டும் குடிநீா் வழங்கப்பட வில்லை. திமுக ஆட்சியின் போது தான் எனது முயற்சியால் ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்திலிருந்து உறைகிணறுகள் அமைக்கப்பட்டு வீரக்கல் ஊராட்சிக்கு குடிநீா் வழங்கப்பட்டது என்றாா். முன்னதாக ஒன்றியக்குழு உறுப்பினா் காணிக்கைசாமி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில், ஆத்தூா் (கிழக்கு) ஒன்றிய திமுக செயலா் பிள்ளையாா்நத்தம் முருகேசன், எஸ். பாறைப்பட்டி ஊராட்சித் தலைவா் பாலாஜி, ஒன்றியக்குழு உறுப்பினா் பாளையங்கோட்டை பாப்பாத்தி உள்பட திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.