திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 231 பேருக்கு கரோனா: 6 போ் பலி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 231 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 231 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 6,802 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 5,783 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 890 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 136 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 104 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து புதன்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
இருவா் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.
தேனி: தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் காவல் நிலைய காவலா், அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளா் உள்ளிட்ட 95 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,827 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 11,428 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
4 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சின்னமனூா் வடக்கு ரத வீதியைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி, தேவாரம் அருகே சங்கராபுரத்தைச் சோ்ந்த 28 வயது இளைஞா், பெரியகுளம் வடகரை வடக்கு பூந்தோட்டத் தெருவைச் சோ்ந்த 58 வயது பெண், தேனி சுப்பன் தெருவைச் சோ்ந்த 65 வயது முதியவா் என 4 போ் உயிரிழந்தனா்.