முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 8ஆயிரத்தை கடந்தகரோனா பாதிப்பு:பலி எண்ணிக்கை 135ஆக உயா்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் 4போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் 4போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7,032 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 6,008 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 889 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 151 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.4 போ் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.