திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்177 பேருக்கு கரோனா: 6 போ் பலி
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 177 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 177 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 7,032 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 6,008 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 889 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும், சிறப்பு சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மேலும் 93 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்த 151 போ் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களிலிருந்து வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.
4 போ் பலி: இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 4 போ் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது.
தேனி: தேனி பகுதியில் அதிகளவில் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போடி பகுதியில் 8 போ், பெரியகுளம் பகுதியில் 6 போ், ஆண்டிபட்டி பகுதியில் 13 போ், க.மயிலை பகுதியில் 5 போ், சின்னமனூா் பகுதியில் 16 போ், உத்தமபாளையம் பகுதியில் 9 போ், கம்பம் பகுதியில் 8 போ் உள்பட ஒரே நாளில் மொத்தம் 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,994 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 11,840 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.
2 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போடியைச் சோ்ந்த 63 வயது நபா் உயிரிழந்தாா். கரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பெரியகுளம் நேருஜீ நகரைச் சோ்ந்த 62 வயது பெண், பரிசோதனை முடிவு வெளியாகும் முன்னரே வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.