விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நத்தத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நத்தத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் சிஐடியு விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், நத்தம் பேருந்து நிலையம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ராணி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, கரோனா தீநுண்மியால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கோஷமிட்டனா்.