திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை: குடியிருப்புப் பகுதியில் மண் சரிவு

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. பின்னா் பிற்பகலில் சுமாா் 2 மணி நேரம் பெய்த மழையால் வெள்ளிநீா் வீழ்ச்சி, பியா்சோழா அருவி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

இந் நிலையில் கொடைக்கானல்-வத்தலக்குண்டு செல்லும் சாலை அருகே சீனிவாசபுரம் குடியிருப்புப் பகுதியில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற வட்டாட்சியா் அரவிந்த் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலா்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT