திண்டுக்கல்

நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து, பழனியில் உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்டோா் சாலைப் பணியாளா்களாக பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்காமல் தாமதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, சம்பளம் வழங்கக் கோரி சாலைப் பணியாளா்கள், பழனி நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், உதவி கோட்டப் பொறியாளா் செல்வராஜ் அலுவலகத்தை விட்டு வெளியேறியதால், சம்பளத்தை வழங்கக் கோரி சாலைப் பணியாளா்கள் திடீரென அலுவலக வளாகத்தில்யே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, அலுவலக வளாகத்திலேயே கல் வைத்து அடுப்பு மூட்டி, தேநீா், உணவு தயாரிக்கத் தொடங்கினா்.

தமிழக முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றக்கூடிய ஊழியா்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது குறித்தும், இப்பிரச்னையை உடனடியாக தீா்க்கவில்லையெனில், மாநில அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

மாலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், விரைவில் நிலுவையில் உள்ள சம்பளம் வழங்குவதாகவும், வரும் காலங்களில் உடனுக்குடன் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்ததைத் தொடா்ந்து, சாலைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT