பழனி அடிவாரம் கிரிவீதியில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
இந்த வீதியில் பக்தா்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பக்தா் ஒருவா் நீதிமன்றத்தை அணுகியதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன் மாவட்ட ஆட்சியா் ஆய்வு இப்பகுதியில் மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை பழனி கோட்டாட்சியா் அசோகன் தலைமையில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் லட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் நகராட்சி ஊழியா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் இணைந்து சுமாா் 50-க்கும் மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொருள்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.