திண்டுக்கல்

காட்டுப் பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

DIN

கன்னிவாடி வனப் பகுதியில் காட்டுப் பன்றியை வேட்டையாடியவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்குள்பட்ட தோணிமலை புலக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் (50). இவா், தனது தோட்டத்தில் காட்டுப் பன்றி இறைச்சியை சமைத்துள்ளதாக வனத் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கன்னிவாடி வனவா் ரெங்கநாதன் தலைமையிலான வனத் துறையினா் ரெங்கராஜ் தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நாய் மூலம் காட்டுப் பன்றியை வேட்டையாடியதை ரெங்கராஜ் ஒப்புக் கொண்டுள்ளாா். இதையடுத்து ரெங்கராஜூக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வனத்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT