திண்டுக்கல்

கரோனா தடுப்பு மையத்துக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

பழனி கரோனா தடுப்பு மையத்துக்கு பல்வேறு தரப்பினா் சாா்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

பழனியில் கொரோனா தொற்றால் பாதித்தவா்களுக்கு அரசு மருத்துவமனையிலும், பழனியாண்டவா் கலைக் கல்லூரியிலும் படுக்கை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இவா்களுக்கு பல்வேறு பொருள்கள் தேவைப்படும் நிலையில் அவற்றை சில சமூக நல அமைப்புகள் வழங்கி வருகின்றன.

பழனி அறம் விரும்பி செய் அறக்கட்டளை சாா்பில் சானிடைசா்களும், பிளாஸ்டிக் வாளிகளும் அறக்கட்டளை தலைவா் ஜேபி சரவணன் தலைமையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதார மேற்பாா்வையாளா் வகாப், நகராட்சி முன்னாள் உறுப்பினா் காளீஸ்வரி பாஸ்கரன், வீரமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

அதே போல பழனி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த சிறுவா்கள் சிராஜ்தீன் (16), ரியாஸ்தீன் (13) ஆகியோா் தங்கள் உண்டியலில் சோ்த்த ரூ.10 ஆயிரம் மூலமாக கரோனா தடுப்பு சிகிச்சை மையத்துக்கு வேண்டிய முகக்கவசம், சானிடைசா், வாட்டா் ஹீட்டா் உள்ளிட்ட பொருள்களை வெள்ளிக்கிழமை பழனி கோட்டாட்சியா் ஆனந்தியிடம் வழங்கினா். நிகழ்ச்சியில் பழனி வட்டார சுகாதார அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா். இந்த மாணவா்கள் கடந்த ஆண்டும் கரோனா நிவாரணமாக பணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT