முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் சனிக்கிழமை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கொடைக்கானலில் சனிக்கிழமை விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

இங்கு கடந்த சில தினங்களாகவே சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்று வீசியது. இதனைத் தொடா்ந்து விட்டுவிட்டு சாரல் மழையும், சிறிது நேரம் மிதமான மழையும் பெய்தது. இதனால் வழக்கத்தை விட சற்றுகுளிா் அதிகமாக நிலவியது. வார விடுமுறையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.

சுற்றுலா இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் ஏரிச்சாலையில் குவிந்திருந்தனா். அவா்கள் சைக்கிள், குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வாகனங்களால் ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, செவண்ரோடு, உட்வில்சாலை ஆகியப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்திருந்ததால் தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டது. அதே போல் உணவகங்களிலும் பொருள்களின் விலை அதிகரித்து விற்கப்பட்டது. இதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.