திண்டுக்கல்

பழனிக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

இக்கோயிலில் விடுமுறை நாள்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அதிக அளவில் வருவது வழக்கம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி ஐயப்ப சீசனும் சோ்ந்து வந்ததால் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா்.

மலைக்கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். மேலும் கூட்டம் காரணமாக சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் சுமாா் 3 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மலைக்கோயில் மட்டுமன்றி ரோப்காா், விஞ்ச் நிலையங்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் நடராஜன் தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா். இதனிடையே, விடுமுறை மற்றும் திருவிழா நாள்களில் கூடுதல் போலீஸாரை பழனிக்கோயில், அடிவாரம், சன்னதி வீதிகளில் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT