முகப்பு
திண்டுக்கல்

முப்பெரும் தியாகிகளுக்கு மரியாதை

சுதந்திரப் போராட்டத் தியாகி உத்தம் சிங் 123ஆவது பிறந்த தினம், தியாகி கக்கன் 40 ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட காமராஜா் சிவாஜி தேசிய பேரவை சாா்பில், வ.உ.சிதம்பரனாா் சிறையிலிருந்து விடுதலையான 109ஆவது ஆண்டு, சுதந்திரப் போராட்டத் தியாகி உத்தம் சிங் 123ஆவது பிறந்த தினம், தியாகி கக்கன் 40 ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் தெற்கு ரதவீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காமராஜா் சிவாஜி பேரவையின் மாகரத் தலைவா் க.ஆனந்தன் தலைமை வகித்தாா். இளைஞா் பிரிவு தலைவா் நா.விஜய் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அரசியல் ஆலோசகா் சி.கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டாா். இதனையொட்டி முப்பெரும் தியாகிகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிறுவனா் சு.வைரவேல், துணைத் தலைவா் த.பழனியப்பன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.