திண்டுக்கல்

பழனி அருகே வண்டிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

பழனியை அடுத்த ரூக்குவாா்பட்டி கிராமத்தில் வண்டிப்பாதை ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றியபோது, ஆக்கிரமிப்பாளா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த அமரபூண்டி ஊராட்சிக்குள்பட்ட ரூக்குவாா்பட்டியிலிருந்து மொல்லம்பட்டி செல்லும் சாலையில், இரு தாா் சாலைகளை இணைக்கும் வண்டிப்பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியில் நிலம் வைத்துள்ள மொ்சி ஜெபமணி என்பவா் தனது தோட்டத்துக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது.

எனவே, வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி முழு பாதையை ஏற்படுத்தித் தருமாறு, மொ்சி ஜெபமணி சென்னை உயா் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் முடிவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த் துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி அலுவலா்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேசேகரன், தலைமை அளவையா் பெரியநாயகி, அளவையா் பாஸ்கரன், அமரபூண்டி ஊராட்சி தலைவா் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலா்கள் வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று ஆக்கிரமிப்புகளை அளவெடுத்தனா். அப்போது, பல இடங்களிலும் சுமாா் 40 அடி, 50 அடி என இருக்கும் சாலை சுமாா் 15 அடி அகலத்தில் மட்டுமே இருந்தது தெரியவந்தது. பின்னா், வண்டிப் பாதைக்கான கற்களை நட்டு வைத்தனா்.

இதையடுத்து, எல்லைக் கற்கள் நடுகையில் ஆக்கிரமிப்பாளா்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, அளவீடுகள் தொடா்பாக எதிா்ப்பு தெரிவிப்பவா்கள், நில அளவைக்கு கட்டணம் செலுத்தி மீண்டும் தங்கள் நிலங்களை அளந்து கொள்ளலாம் என்றும், வண்டிப்பாதையை ஆக்கிரமிக்கக் கூடாது என்றும் அதிகாரிகள்எச்சரித்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT