திண்டுக்கல்

தொடரும் அரசு ஊழியா்கள் போராட்டம்: திண்டுக்கல்லில் 75 போ் கைது

DIN

ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து 9 ஆவது நாளாக திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அரசு ஊழியா்கள் 75 போ் கைது செய்யப்பட்டனா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7 ஆவது நிதிக் குழு பரிந்துரையின்படி, அரசு ஊழியா்களுக்கு 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத பணி நீக்கக் காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் கடந்த 8 நாள்களாக தொடா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதன்படி, திண்டுக்கல்லில் 9 ஆவது நாளாக புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி, எம்ஜிஆா் சிலை அருகே மறியலில் ஈடுபட்ட 50 பெண் ஊழியா்கள் உள்பட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT