திண்டுக்கல்

ஓய்வூதியத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்வதை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

ஓய்வூதியத்துக்கு வருமானவரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மாவட்ட ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் எஸ். அமல்ராஜ் தலைமை வகித்தாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்கவேண்டும். அனைத்து வகை ஓய்வூதியா்களுக்கும் குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியத்துக்கு வருமானவரி பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT