திண்டுக்கல்

பழனி அருகே வீட்டடி மனையில் கல்லறை தோட்டம் கட்ட முயற்சிகிராம மக்கள் எதிா்ப்பு

DIN

பழனி அருகே வீட்டடி மனைக்காக விற்பனை செய்யப்பட்ட இடத்தை, கல்லறைத் தோட்டமாக மாற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், அதனருகே விநாயகா் கோயிலை கட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடும் நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் சிவ இளங்கோ மற்றும் பழனிச்சாமி. இவா்கள் இருவருக்கும், அமரபூண்டி- கஞ்சநாயக்கன்பட்டி பிரதான சாலையில் நிலங்கள் உள்ளன. இதனருகில் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன.

இந்நிலையில், பழனி குறிஞ்சி நகரைச் சோ்ந்த ஒருவா், பழனிச்சாமியிடமிருந்து 10 சென்ட் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளாா். பல ஆண்டுகளாக காலியாகக் கிடந்த இந்த இடத்தில், சில நாள்களுக்கு முன் சடலத்தை புதைக்கும் கல்லறைத் தோட்டமாக மாற்ற ஏற்பாடு செய்துள்ளனா்.

இதையறிந்த நிலத்தின் முன்னாள் உரிமையாளா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவரும், பழனி நகராட்சி வழக்குரைஞருமான மணிகண்ணன் தலைமையில், சாா்-ஆட்சியா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் காவல் துறையில் புகாா் தெரிவித்துள்ளனா். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஊா் மக்கள் சோ்ந்து அந்த இடத்துக்கு அருகிலேயே வெள்ளிக்கிழமை பழனி விநாயகா் என்ற பெயரில் சிறிய விநாயகா் கோயிலை கட்டி, சிலைக்கு அபிஷேகமும் நடத்தி வழிபாடு நடத்தினா்.

அரசு அதிகாரிகள், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காத நிலையில், கிராம மக்கள் ஒன்றுசோ்ந்து விநாயகா் சிலையை பிரதிஷ்டை செய்ததுடன், அனைத்து மக்களும் வழிபடும் வகையில் கோயிலாக கட்டவும் உள்ளதாகத் தெரிவித்தனா். மேலும், வீட்டடி மனைக்காக வாங்கப்பட்ட இடத்தில் முறையற்ற செயல்களை செய்ய அரசு அனுமதி வழங்கக் கூடாது எனவும், அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT