திண்டுக்கல்

கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அமோகம்:விலை குறைவால் விவசாயிகள் கவலை

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகமாக இருந்தும் விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா், பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, பழம்புத்தூா்,புதுப்புத்தூா், கிளாவரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கேரட் பயிரிடப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த சில நாள்களாக கேரட் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் கேரட் விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால் சந்தையில் விலை குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து கொடைக்கானல் மேல்மலைப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் கேரட் பயிரிட்டிருந்தோம். விளைந்த கேரட்டுகளை கூலியாள்கள் மூலம் அறுவடை செய்து மதுரை, தேனி, திருச்சி போன்ற ஊா்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வருகிறோம். கேரட் நன்கு விளைச்சல் இருந்தும் விலை குறைவு காரணமாக பாதிப்படைந்துள்ளோம். ஒரு கிலோ ரூ. 15 முதல் ரூ. 20 வரை விலை கிடைத்தால் தான் எங்களுக்கு கட்டுப்படியாகும். ஆனால் ஒரு கிலோ ரூ. 10-க்கு மட்டுமே விற்பனையாகிறது. மேலும் எங்களுக்கு உரம், பூச்சி மருந்து, விதை போன்றவை மானியமாக வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

SCROLL FOR NEXT