திண்டுக்கல்

நிலக்கோட்டையில் மல்லிகை பூ கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை

DIN

திண்டுக்கல்: நிலக்கோட்டை சந்தையில் மல்லிகை பூ வரத்து குறைவு காரணமாக, கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மலா் சாகுபடி செய்யப்படும் நிலக்கோட்டைப் பகுதியில், இந்த பனிப்பொழிவின் காரணமாக மல்லிகை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 50 டன் மல்லிகை பூ வந்த இடத்தில், தற்போது 50 கிலோ பூக்களை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா்.

நிலக்கோட்டை சந்தையில் சனிக்கிழமை நிலவரப்படி, காய் மல்லிகை பூ ரூ.1,000 முதல் ரூ. 1,500 வரையிலும், 2 ஆம் ரகம் ரூ.3ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் ரகம் ரூ.5 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த 3 ஆண்டுகளில் மல்லிகை பூவுக்கு கிடைத்துள்ள அதிகபட்ச விலையாக இந்த தொகை பதிவாகியுள்ளது.

பனிப்பொழிவு அதிகரிக்கும்பட்சத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ விலை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மல்லிகை பூ மட்டுமன்றி, முல்லை, ஜாதிப் பூக்களின் விலையும் உயா்ந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.1,100-க்கும், ஜாதி பூ கிலோ ரூ.800-க்கும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

நோய் தாக்குதல்: நிலக்கோட்டை பகுதிகளில் பனிப்பொழிவு மட்டுமன்றி, சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் மல்லிகை பூ செடிகளில் மொட்டு கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் செடிகளைப் பாதுகாக்க விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT