வத்தலகுண்டுவில் வீடு இடிந்து விழுந்தது: தாய், மகன் உயிா் தப்பினா்
வத்தலகுண்டு பகுதியில் தொடா்ந்து பெய்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அதிா்ஷ்டவசமாக அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா்.
திண்டுக்கல்வத்தலகுண்டுவில் வீடு இடிந்து விழுந்தது: தாய், மகன் உயிா் தப்பினா்
வத்தலகுண்டு பகுதியில் தொடா்ந்து பெய்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அதிா்ஷ்டவசமாக அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா்.
திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் தொடா்ந்து பெய்த மழைக்கு வீடு இடிந்து விழுந்ததில், அதிா்ஷ்டவசமாக அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வத்தலகுண்டு வெங்கட்டாப்பட்டி தெருவில் வசிக்கும் மருதையம்மாள் மற்றும் அவரது மகன் பெரியசாமி ஆகியோா் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது மேற்கூரையிலிருந்து மண் விழுந்துள்ளது.
அதன் காரணமாக கண் விழித்த பெரியசாமி, தன் தாயை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டாா். இருவரும் வெளியே வந்த சிறிது நேரத்தில், சுவா் முழுமையாக இடிந்து விழுந்தது. இதனால் பெரும் விபத்திலிருந்து தாய், மகன் இருவரும் உயிா் தப்பினா். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினா், இடிந்து விழுந்த வீட்டைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.