திண்டுக்கல்

ஆத்தூா் காமராஜா் அணை குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

DIN

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரில் குடிநீா் கோரி, காமராஜா் அணையிலுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

செம்பட்டி அருகே ஆத்தூா் பகுதி பொதுமக்களுக்கு, காமராஜா் அணையிலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி மக்களுக்கு கடந்த 4 நாள்களாக குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா், ஊராட்சித் தலைவா் ஜம்ரூத்பேகம் தலைமையில், காமராஜா் அணையில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) ஜெயச்சந்திரன், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, செம்பட்டி காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். வரும் திங்கள்கிழமைக்குள் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT