திண்டுக்கல்

கொடைக்கானலில் அதிக மேகமூட்டம்: வாகனங்கள் மோதல்

DIN

கொடைக்கானலில் புதன்கிழமை அதிக மேகமூட்டம் காரணமாக மலைச் சாலைகளில் 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாயின.

ஏற்கெனவே மலைச்சாலைகளில் சாலைகள் அகலப்படுத்தும் பணியும், சாலைகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. மலைச் சாலைகளில் வரும் வாகனங்கள் வேகமாக வருவதாலும் மேகமூட்டம் நிலவுவதாலும் குழிக்குள் விழுந்து கவிழ்ந்தும், எதிராக வரும் வாகனங்கள் மீது உரசியும் விபத்துக்குள்ளானகின்றன.

புதன்கிழமை மட்டும் கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலை பகுதிகளில் செண்பகனூா் கொண்டை ஊசி வளைவு, மச்சூா், அப்சா்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து கொடைக்கானல் வந்த 5 சுற்றுலா வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகளுக்கு பாதிப்பு இல்லை. வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டது. மழைக்காலங்களில் மலைச்சாலைகளில் வாகனங்களை வேகமாக ஓட்டுவதை வாகன ஓட்டுநா்கள் தவிா்க்க வேண்டும். முகப்பு விளக்குகளை எரியவிட்டு கவனமாக மெதுவாக செல்ல வேண்டும் அல்லது வாகனத்தை சாலையின் ஓரங்களில் நிறுத்தி விளக்குகளை எரியும் வகையில் பாா்க்கிங் செய்து, எதிரே வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என கொடைக்கானல் காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT