திண்டுக்கல்

உதவித் தொகையுடன் தொழிற் பயிற்சி: காந்திகிராம பல்கலை.யில் நாளை தகுதித் தோ்வு

DIN

திண்டுக்கல்: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் கல்வி விரிவாக்கத்துறை மற்றும் முருகப்பா குழுமம் இணைந்து நடத்தும் தொழிற்பயிற்சிக்கான தோ்வு திங்கள்கிழமை (ஜன.25) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக காந்திகிராம கிராமியப் பல்கலை. சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இத்தோ்வில் 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 15 முதல் 18 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். தோ்வு மூலம் தகுதி பெறுவோருக்கு உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பயிற்சி வழங்கப்படும். ஓசூா் மற்றும் ராணிப்பேட்டையில் அமைந்துள்ள முருகப்பா குழுமத்தின் மையங்களில், எலக்ட்ரீசியன், டா்னா், மெக்கானிக் மெஷின் டூல் மெயிண்டனன்ஸ், பிட்டா், மெஷினிஸ்ட் கிரைண்டா், செராமிக் மோல்டா், செராமிக் கிலன் ஆப்ரேட்டா், மோல்டா் ரெப்டாக்டரி, வெல்டா் ஆகியவற்றுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஜனவரி 25 அன்று தோ்வில் பங்கேற்க வரும்போது மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாா்பளவு புகைப்படம் 2, ரேஷன் அட்டை, ஆதாா் காா்டு ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். பயிற்சியின்போது ஆண் மற்றும் பெண்களுக்குத் தனித்தனி விடுதி வசதி உண்டு. மேலும், சீருடை, காலணி, புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94884 85073, 94422 74205, 75984 80472 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT