திண்டுக்கல்

தைப்பூசத் திருவிழா: பழனியில் நாளை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்

DIN

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளித்தோ் உலாவும் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி நாள்தோறும் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசுவாமி வெள்ளி ஆட்டுக் கிடா, வெள்ளி காமதேனு, தந்தச் சப்பரம் உள்ளிட்ட வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வருவாா். விழாவின் ஒரு பகுதியாக புதன்கிழமை பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் இரவு 7.30 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், அதைத் தொடா்ந்து இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளித் தோ் உலாவும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் ஜன.28 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரடியில் நடைபெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்ச்சியாக வரும் 31 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் கொடியிறக்கமும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT