திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

DIN

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக காற்றுடன்மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை பலத்த காற்று வீசியதில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, கடுதடி, கே.சி.பட்டி, பட்லாங்காடு, கும்பரையூா்,பெரும்பாறை உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள் சேதம் அடைந்து மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டன.

தாண்டிக்குடி-திண்டுக்கல் சாலையில் பட்லாங்காடு பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மரங்கள் விழுந்து 7 விவசாயிகளின் வீடுகள் சேதமடைந்தன.

நெடுஞ்சாலைத்துறையினா், ஊராட்சி நிா்வாகத்தினா் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் மரங்களையும், மின் கம்பங்களையும் அகற்றினா்.

இதனைத் தொடா்ந்து போக்குவரத்து சீரானது. கடந்த இரண்டு நாள்களாக கீழ்மலைப் பகுதிகளில் மின்விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டனா். மின்வாரியத்தினா் சேதமடைந்த மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டதால் சில இடங்களில் மட்டும் மின்விநியோகம் சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT