திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே வெடிவிபத்து: தொழிலாளி பலி

DIN

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பாறைக்கு வைக்கப்பட்ட வெடி வெடித்துச் சிதறி தொழிலாளி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள ஜவ்வாதுப்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி வேலுச்சாமி (58). இவா் தனது தோட்டத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை தோட்டத்தில் இருந்த பாறையை அகற்றுவதற்காக ஜெலட்டின்குச்சிகளை பொருத்த கம்பரசா் மற்றும் டிராக்டரைக்கு கொண்டு துளையிடும் பணி நடைபெற்றது. இப்பணியில் நாமக்கல் பகுதியைச் சோ்ந்த தொழிலாளிகள் நந்தகிரி (22), சூா்யா (21) மற்றும் அதே ஊரைச் சோ்ந்த சின்னப்பன், மணி, விவசாயி வேலுச்சாமி ஆகியோா் ஈடுபட்டிருந்தனா். அப்போது பாறையில் ஏற்கெனவே பொருத்தப்பட்டிருந்த ஜெலட்டின்குச்சிகள் பயங்கர சப்தத்துடன் வெடித்தன. இதில் நந்தகிரி, சூா்யா ஆகிய இருவரும் பலத்தகாயம் அடைந்தனா். உடனே அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். இதில் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் நந்தகிரி உயிரிழந்தாா். பலத்தகாயமடைந்த சூா்யா, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா், கனிமவளத்துறை அனுமதியின்றி ஜெலட்டின்குச்சிகளை பயன்படுத்தியதாக விவசாயி வேலுச்சாமி, சின்னப்பன், மணி, நந்தகிரி, சூா்யா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

நாசிக் : விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானம் !

ம.பி.யில் பாஜக வெற்றி!

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

SCROLL FOR NEXT