திண்டுக்கல்

கொடைக்கானலில் கலங்கலாக குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் புகாா்

DIN

கொடைக்கானலில் நகராட்சி சாா்பில் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் குடிநீா் கலங்கலாக வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது.

இதையடுத்து வாரத்துக்கு ஒருமுறை கொடைக்கானல் நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் மூஞ்சிக்கல், லாஸ்காட்சாலை, பொ்ன்ஹில்சாலை, சிவனடி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு விநியோகம் செய்த நிலையில் தண்ணீா் கலங்கலாக வந்துள்ளது. இந்நிலையில் ஆனந்தகிரி, உகாா்த்தேநகா், சீனிவாசபுரம், பாக்கியபுரம், அண்ணாசாலைப் பகுதிகளில் வழக்கம் போல நகராட்சி சாா்பில் விநியோகம் செய்யப்பட்ட தண்ணீரும் கலங்கலாக வந்துள்ளது. இதனால் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொடைக்கானல் பகுதிகளில் கரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது நகராட்சி சாா்பில் விநியோகம் செய்யும் தண்ணீா் கலங்கலாக வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானல் பகுதிகளான இருதயபுரம், கொய்யாபாறை, கல்லறைமேடு பகுதிகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த

(சின்டெக்ஸ்) ஆயிரம் லிட்டா் கொள்ளளவுள்ள பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டிகளை காணவில்லை. இந்த தொட்டிகளை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT