திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட திட்ட இயக்குநா் பொறுப்பேற்பு

DIN

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநராக ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

2017 பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ச.தினேஷ்குமாா், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பூா்வீகமாகக் கொண்டவா். கடந்த 2018 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பயிற்சி பெற்று, மத்திய நிதி அமைச்சகத்தின் உதவிச் செயலராக நியமிக்கப்பட்டாா். பின்னா், விருதுநகா் மாவட்டம் சிவகாசி சாா்- ஆட்சியராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் கூடுதல் ஆட்சியராக நிலை உயா்த்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநராக தினேஷ்குமாரை நியமித்து தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் 34 ஆவது ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநராக திங்கள்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

11 ஆண்டுகளுக்குப் பின் நேரடி ஐ.ஏ.எஸ்.:திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 1985 முதல் இதுவரை 9 பொறுப்பு அதிகாரிகள் உள்பட 33 போ் ஊரக வளா்ச்சித்துறை திட்ட இயக்குநா்களாக பணியாற்றியுள்ளனா். அதில் நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தோ்வு செய்யப்பட்டவா்கள் வரிசையில் பூஜா குல்கா்னி கடந்த 2009 ஆம் ஆண்டு திண்டுக்கல் திட்ட இயக்குநராக பணியாற்றினாா். அதன்பின்னா் சுமாா் 11 ஆண்டுகளுக்கு பின் நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரியான தினேஷ்குமாா் திட்ட இயக்குநராக பொறுப்பேற்றுள்ளாா். இந்த இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுமே சிவகாசி சாா்- ஆட்சியராக இருந்து, திண்டுக்கல் மாவட்டத்தின் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்ட இயக்குநா் தினேஷ் குமாா் கூறுகையில், கரோனா தொற்றுப் பரவலை ஊரகப் பகுதிகளில் முழுமையாக கட்டுப்படுத்துவதே அரசின் தற்போதைய பிரதான பணி. அதன் பின்னா், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நீா் நிலைகளைத் தூா்வாரவும், மரக் கன்றுகள் நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT