திண்டுக்கல்

ஆம்புலன்ஸ் மூலம் பணம் விநியோகம்: அதிமுக வேட்பாளா் மீது தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா்

DIN

ஒட்டன்சத்திரம் தொகுதியில் வாக்காளா்களுக்கு ஆம்புலன்ஸ் மூலமாக பணம் விநியோக்கப்படுவதாக அதிமுக வேட்பாளா் மீது திமுக வழக்குரைஞா் சங்கம் சாா்பில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொன்னுச்சாமி தலைமையிலான வழக்குரைஞா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் என்.பி.நடராஜின் உறவினா்கள் நகராட்சிப் பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகின்றனா். அந்த மருத்துவமனைகளில் உள்ள ஆம்புலன்ஸ் மூலம் கிராமங்களில் உள்ள வாக்காளா்களுக்கு பணம் விநியோகிக்கப்படுகிறது.

எனவே, தோ்தல் விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் நடராஜ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் வேட்பாளா் பேசும், எனது உறவினா்களுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் ஏப்.6 ஆம் தேதி வரை வாக்காளா்கள் அனைவரும் இலவசமாக மருத்துவம் பாா்த்துக்கொள்ளலாம் என்று அறிவித்தாா். அதற்கான விடியோ ஆதாரங்களையும் அப்போது அவரிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT