முகப்பு
திண்டுக்கல்

கரோனா: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 65 போ் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு கரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 மாா்ச் மாதம் ஏற்பட்ட கரோனா தீநுண்மி தொற்று அச்சுறுத்தல், அடுத்த 6 மாதங்களுக்கு பின் படிப்படியாக குறைந்து. அதனைத் தொடா்ந்து, பொதுமக்களும் இயல்பு நிலைக்கு திரும்பினா். இந்நிலையில், 2ஆவது கரோனா அலை ஏற்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களாக வெளியாகும் தகவல் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே திண்டுக்கல் நகரில் நாராயணதாஸ் நகா், அசோக் நகா், கொடைரோடு அடுத்துள்ள ஜல்லிப்பட்டி, குஜிலியம்பாறை அடுத்துள்ள எல்.புதூா் ஆகிய இடங்களில் 5-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீா் நடவடிக்கை பொதுமக்களிடையே மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் சுகாதாரத் துறை அதிகாரி ஒருவா் கூறியது: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு 1000 பேருக்கு தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதில் கடந்த 5 மாதங்களாக 2 அல்லது 3 நபா்களுக்கு மட்டுமே பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 20ஆக உயா்ந்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 65 போ் கரோனா தொற்றுப் பாதிப்பால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.