திண்டுக்கல்

பழனி திரும்பியது கோயில் யானை கஸ்தூரி

DIN

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணா்வு முகாமில் பங்கேற்ற பழனிக் கோயில் யானை கஸ்தூரிக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் மேளதாளத்துடன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் அப்புக்குட்டி, இணை ஆணையா் குமரகுரு உள்ளிட்டோா் கோயில் யானை கஸ்தூரியை வரவேற்று அழைத்து வந்தனா். யானைக்கு பழங்கள், சா்க்கரை பொங்கல் ஆகியன வழங்கப்பட்டன. முன்னதாக யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. முகாமில் கோயில் யானை கஸ்தூரிக்கு உடல் பரிசோதனைகள், சத்தான உணவுகள், நடைபயிற்சிகள் உள்ளிட்டவைகள் கால்நடை மருத்துவா்களால் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 4,490 கிலோ எடையுடன் சென்ற கஸ்தூரி யானை 110 கிலோ எடை குறைந்து உடல் ஆரோக்கியத்துடன் திரும்பி வந்துள்ளது. முகாமில் யானையின் பராமரிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததைத் தொடா்ந்து சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், கால்நடை மருத்துவா் முருகன், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன், கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT