திண்டுக்கல்

முன்கள பணியாளா்களுக்கு பழனி கோயில் நிா்வாகத்தினா் பஞ்சாமிா்தம் வழங்கல்

DIN

பழனி: கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளா்களுக்கு பழனி கோயில் நிா்வாகம் சாா்பில் சுமாா் 55 ஆயிரம் பஞ்சாமிா்த டப்பாக்கள் சனிக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

பழனி கோயிலில் பஞ்சாமிா்தம் மற்றும் பழம் போன்ற மூலப்பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. கரோனா பரவல் காரணமாக கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. பக்தா்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டதால் கோயிலில் தயாா் செய்து வைக்கப்பட்டிருந்த 61 ஆயிரம் கிலோ பஞ்சாமிா்தங்கள் வீணாவதைத் தடுக்கும் வகையில், அறநிலையத்துறை ஆணையா், பழனிக்கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி, அறங்காவலா் குழு தலைவா் அப்புக்குட்டி ஆகியோா் ஆலோசனையின் பேரில் முன்களப் பணியாளா்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பழனியில் உள்ள நகராட்சி, வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, சுகாதாரத்துறை, மருத்துவமனை மற்றும் காவல்துறையினருக்கும், கோயில் சுகாதாரப்பணியாளா்களுக்கும் தலா அரைகிலோ பஞ்சாமிா்த டப்பாக்கள் சனிக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

மேலும், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள முன்களப் பணியாளா்களுக்கும் பஞ்சாமிா்தம் இலவசமாக வழங்கப்பட்டது.

கோயில் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கை பக்தா்கள் மற்றும் பொதுமக்களிடையை பாராட்டைப் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT