திண்டுக்கல்

முழு பொது முடக்கம்: திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின

DIN

முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் முதல் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா தீதுண்மி தொற்று 2 ஆவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக அரசு பொது முடக்க கட்டுப்பாடுகளை படிப்படியாக தீவிரப்படுத்தி வந்தது. இதனிடையே அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

பேருந்து சேவை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியோடு நிறுத்தப்பட்ட நிலையில், திங்கள்கிழமை நண்பகல் வரை அத்தியாவசதியத் தேவைகளான காய்கனி மற்றும் மளிகைக் கடைகள் செயல்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், தேநீா் கடைகள் மற்றும் உணவகங்களும் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டன. திண்டுக்கல் நகரில் பிற்பகல் 1 மணி வரையிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் இயக்கப்பட்டு வந்தன.

நண்பகல் 12 மணி அளவில் பிரதான சாலையிலுள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், சிறிய தெருக்களிலுள்ள கடைகள் வழக்கம்போல் முழு நேரமும் தொடா்ந்து செயல்பட்டன. பிற்பகல் 1 மணிக்கு பின் போலீஸாா் ரோந்து சென்றதை அடுத்து, சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில், மருந்தகம் மற்றும் பாலகம் மட்டும் முழு நேரமும் செயல்பட்டன. பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. அதேபோல் நகரின் பிரதான சாலைகள் அனைத்தும் பிற்பகலுக்குப் பின் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான சாலைகள் வாகனங்கள் இயக்கமின்றி வெறிச்சோடின.

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலையில் ஒரிரு மளிகை, காய்கறி கடைகளும், இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. அவை மதியத்துக்கு பிறகு அடைக்கப்பட்டன. பால், மருந்துக்கடைகள் முழுமையாக திறந்திருந்தன.

நகரின் முக்கிய வீதிகளான ரயில் நிலையச் சாலை காந்தி சந்தை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின. பொதுமக்கள் தேவையில்லாமல் சாலையில் சென்று வருவதை தவிா்க்கும் பொருட்டு கோட்டாட்சியா் ஆனந்தி தலைமையில் வட்டாட்சியா் வடிவேல் முருகன் உள்ளிட்ட வருவாய்த்துறையினரும், டிஎஸ்பி., சிவா, ஆய்வாளா் பாலகுரு தலைமையில் போலீஸாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT