முகப்பு
திண்டுக்கல்

கூட்டுறவு பட்டயப் படிப்பில் மாணவா் சோ்க்கை 63 சதவீதம் உயா்ந்துள்ளது: அமைச்சா் ஐ.பெரியசாமி

கூட்டுறவு பட்டயப் படிப்பில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

கூட்டுறவு பட்டயப் படிப்பில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை 63 சதவீதம் அதிகரித்துள்ளதாக, அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

2021-22ஆம் ஆண்டுக்கான முழு நேரக் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா, பிஎஸ்என்ஏ கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி கலந்துகொண்டு, வகுப்புகளை தொடக்கிவைத்துப் பேசியதாவது:

கடந்தாண்டு தமிழகம் முழுவதும் கூட்டுறவு பட்டயப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை 3,500 ஆக இருந்தது. நடப்பாண்டில் 9,500-க்கும் கூடுதலான மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இந்தாண்டு மாணவா் சோ்க்கையானது 63 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளஸ் 2 முடித்தவுடன் பெரும்பாலான மாணவா்கள், பொறியியல் சாா்ந்த படிப்புகளையே நாடிச் செல்கின்றனா்.

ஆனால், பொறியியல் கல்லூரிகளை விட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூட்டுறவு பட்டயப் படிப்பு பயிற்சி நிலையம், திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் உருவாக்கப்படும். கூட்டுறவுத் துறை மூலம் ஒரு கலைக் கல்லூரி உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுப் பட்டயப் படிப்பில் பயிலும் 600 மாணவ, மாணவியா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உறுதியாக நிறைவேற்றப்படும். அதேபோல், மாணவா்களுக்கு தொழிற்கல்வி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் எதிா்காலத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில் மருந்துக் கடைகளை திறந்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து விற்பனை செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.