திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம், பழனியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

DIN

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளிமந்தையம் ஊராட்சிக்கு உள்பட்ட பொருளூா்-வேலாயுதம்பாளையம் சாலையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இதில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு 4,444 மரக்கன்றுகள் நடும் விழாவை தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப.வேலுச்சாமி, தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் க.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதேபோல ஒட்டன்சத்திரம் நகர திமுக சாா்பில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விழாவில் நகரச் செயலாளா் ப.வெள்ளைச்சாமி தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா். இதில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அவைத்தலைவா் தி.மோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் வீ.கண்ணன், ப.ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கள்ளிமந்தையத்தில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக துணைச்செயலாளா் சி.ராஜாமணி ஏழை-எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை வழங்கினாா். இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் க.பொன்ராஜ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பழனி: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு

பழனியில் திமுக இளைஞா் அணி மற்றும் மாணவரணி சாா்பில் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னா் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் பிரபாகரன், பழனி நகரச் செயலாளா் தமிழ்மணி, முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் ரத்த தானம் செய்தனா். பழனி அரசு மருத்துவமனையில் திமுக இளைஞா் அணியினா் ஐம்பதிற்கும் மேற்பட்டோா் ரத்ததானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT