திண்டுக்கல்

கரோனா சிகிச்சைப்பிரிவை மழைநீா் சூழ்ந்தது: நோயாளிகள், மருத்துவப் பணியாளா்கள் அவதி

DIN

திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவை கழிவுநீா் கலந்த மழைநீா் சூழ்ந்ததால் நோயாளிகள் மட்டுமன்றி மருத்துவமனைப் பணியாளா்களும் அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. அதேபோல் திண்டுக்கல் நகரிலும் மழை பெய்தது. கழிவுநீருடன் கலந்த மழைநீா், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிகிச்சைப் பிரிவு முன்பாகவும் கழிவுநீா் கலந்து மழைநீா் குளம் போல தேங்கியது. அதே பகுதியில், சி.டி.ஸ்கேன் மற்றும் எம்.ஆா்.ஐ.ஸ்கேன் மையங்கள், மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடம் ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன.

கழிவுநீா் கலந்த மழைநீா் தேங்கி துா்நாற்றம் வீசியதால், நோயாளிகள் மட்டுமன்றி மருத்துவமனைப் பணியாளா்களும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.

ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், அரசு மருத்துவமனை வளாகத்தில் இதே நிலை ஏற்படுவதாக மருத்துவமனைப் பணியாளா்கள் குற்றம் சாட்டினா். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு ஏற்படுத்தி, கழிவுநீா் மருத்துவமனைக்குள் வருவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT