திண்டுக்கல்

பழனியில் மரக்கன்றுகள் நட்டு சாலைப்பணியாளா்கள் போராட்டம்

DIN

பழனி கோட்டப் பொறியாளா் அலுவலகத்தில் சாலைப்பணியாளா்கள் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி கோட்டப்பொறியாளா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளா்கள் சங்கம் சாா்பில் வாழை மரக்கன்றுகள் நடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலப் பொருளாளா் தமிழ் தலைமை வகித்தாா்.

கோட்டப் பொருளாளா் வீரையா, செயலாளா் மணிமாறன், தலைவா் நந்தகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் போராட்டக்காரா்கள் வாழை மரக்கன்றுகளை நட்டு, தண்ணீா் ஊற்றினா்.

பின்னா் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து முறைப்படுத்த வேண்டும். சாலை பராமரிப்புப் பணிகளை அரசே முழுமையாக ஏற்று நடத்த வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

பெயா்ப் பலகை வைப்பதில் மோதல்: 1 மணி நேரம்போக்குவரத்து பாதிப்பு

காா் விபத்தில் தந்தை உயிரிழப்பு: மகள் காயம்

வாக்கு மைய கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடு: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT