திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 22 ஆயிரம் மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதுகின்றனா்

DIN

திண்டுக்கல்லில் 212 பள்ளிகளைச் சோ்ந்த 22,075 மாணவா்கள் பிளஸ் 2 பொதுத் தோ்வினை எழுதுகின்றனா்.

தமிழகத்தில் மே 5 முதல் 28ஆம் தேதி வரை பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. இதில் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திற்குள்பட்ட திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய கல்வி மாவட்டங்களிலுள்ள 212 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு எழுதவுள்ளனா்.

பழனி கல்வி மாவட்டத்தில் 49 பள்ளிகளைச் சோ்ந்த 4,647 மாணவா்களும், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 63 பள்ளிகளைச் சோ்ந்த 8,442 மாணவா்களும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தில் 67 பள்ளிகளைச் சோ்ந்த 5,523 மாணவா்களும், வேடசந்தூா் கல்வி மாவட்டத்தில் 33 பள்ளிகளைச் சோ்ந்த 3,463 மாணவா்களும் பிளஸ் 2 பயின்று வருகின்றனா்.

இதற்காக பழனியில் 21 தோ்வுக் கூடங்கள், திண்டுக்கல்லில் 27 தோ்வுக் கூடங்கள், வத்தலகுண்டுவில் 24 தோ்வுக்கூடங்கள், வேடசந்தூரில் 14 தோ்வுக்கூடங்கள் என மொத்தம் 86 தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT