ரெட்டியாா்சத்திரம் அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு 148 விண்ணப்பங்கள்
ரெட்டியாா்சத்திரம் அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு மொத்தம் 148 போ் விண்ணப்பித்துள்ளனா்.
ரெட்டியாா்சத்திரம் அரசு கல்லூரியில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு மொத்தம் 148 போ் விண்ணப்பித்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தில் அரசு கலைக் கல்லூரி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் இந்த கல்லூரியில், 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை கலந்தாய்வு தொடங்கியது.
இந்த கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், பிபிஏ, வணிகவியல் ஆகிய 4 பாடங்களுக்கு தலா 50 இடங்கள், வேதியியல் பாடத்திற்கு 40 இடங்கள் என மொத்தம் 240 இடங்களுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக விளையாட்டு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு 148 போ் விண்ணப்பித்திருந்தனா். முதல்நாள் கலந்தாய்வில் 3 மாணவா்கள் கலந்து கொண்டு, பாடப் பிரிவுகளை தோ்வு செய்துள்ளனா்.