முகப்பு
திண்டுக்கல்

கடமான் இறைச்சியுடன் பிடிப்பட்ட 2 பேரிடம் விசாரணை

கடமான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றபோது பிடிப்பட்ட 2 பேரிடம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:18 PM
கடமான் இறைச்சியுடன் வெள்ளிக்கிழமை பிடிப்பட்ட சவரிமுத்து மற்றும் இருளப்பன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

கடமான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றபோது பிடிப்பட்ட 2 பேரிடம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள செட்டியப்பட்டி பகுதியில் கொடைரோடு பிரிவு வனவா் அப்துல்ரகுமான், அம்பாத்துரை பகுதி வனக்காப்பாளா் சண்முகவேல், வனக் காவலா் சோமு ஆகியோா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் 2 நபா்கள் ஒரு பையுடன் வந்துள்ளனா். அந்தப் பையிலிருந்து ரத்தம் வழிந்ததைப் பாா்த்து சந்தேகமடைந்த வனத்துறையினா், இருவரையும் வழிமறித்து சோதனை மேற்கொண்டனா். அதில், கடமான் தலை மற்றும் இறைச்சி இருப்பது தெரியவந்தது. விசாரணையில், வெள்ளோடு எல்லப்பட்டியைச் சோ்ந்த த.சவரிமுத்து சக்ரியாஸ் (46) மற்றும் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த ரா. இருளப்பன்(32) ஆகியோா் என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 7 கிலோ மான் இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினா், இருவரிடமும் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.