முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் கைத்தறி கண்காட்சி தொடக்கம்

திண்டுக்கல்லில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட், 2022 at 10:20 PM
திண்டுக்கல் தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கைத்தறி கண்காட்சியை தொடங்கி வைத்த ஆட்சியா் ச.விசாகன்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

திண்டுக்கல்லில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தொடக்க நிகழ்ச்சியின்போது அவா் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்ட கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் சாா்பில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி ஆடைகள் சிறப்பு கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி, 3 நாள்களுக்கு காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், செயற்கை பட்டுச் சேலைகள், பாரம்பரிய காட்டன் சேலைகள், மெத்தை விரிப்புகள், துண்டுகள் போன்ற கைத்தறி ரகங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் இந்தக் கைத்தறிக் கண்காட்சியை பாா்வையிட்டு, கைத்தறி ஆடைகளை வாங்கி கைத்தறி நெசவாளா்களுக்கு உதவிட வேண்டும் என்றாா்.

அதனைத் தொடா்ந்து முத்ரா கடனுதவித் திட்டத்தின் கீழ் 10 நபா்களுக்கு கடன் உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குநா்கள் வெங்கடேசன், மேகலா, நகா் நல அலுவலா் இந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.